< Back
சினிமா செய்திகள்
ஸ்ரீதேவி மகள் நாயகி லவ் டுடே இந்தி ரீமேக் படத்தில் அமீர்கான் மகன்
சினிமா செய்திகள்

ஸ்ரீதேவி மகள் நாயகி 'லவ் டுடே' இந்தி ரீமேக் படத்தில் அமீர்கான் மகன்

தினத்தந்தி
|
26 May 2023 6:39 AM IST

தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமான லவ் டுடே படம் வசூல் சாதனை நிகழ்த்தி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது. காதல் ஜோடி செல்போனை மாற்றிக் கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி இருந்தது.

வசூலில் சாதனை படைத்த இதில் நாயகியாக இவானா வந்தார். சத்யராஜ், ராதிகா, யோகிபாபு ஆகியோரும் நடித்து இருந்தனர். லவ் டுடே படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது.

இதில் நடிக்கும் கதாநாயகன் நாயகி தேர்வு நடந்து வந்தது. லவ் டுடே இந்தி ரீமேக்கில் நடிக்க நாயகனாக இந்தி நடிகர் அமீர்கான் மகன் ஜுனைத் கானையும் நாயகியாக நடிக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூரையும் தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் இந்த படத்தில் காதலர்களாக நடிக்கிறார்கள். அத்வைத் சந்தன் டைரக்டு செய்கிறார்.

மேலும் செய்திகள்