தமிழ் படத்தில் இலங்கை நடிகை
|இலங்கையை சேர்ந்த சிங்கள நடிகையான தசுனி தமிழில் ‘அண்ணே' என்ற பெயரில் தயாராகும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
தமிழ் படங்களில் வெளிநாட்டு நடிகைகள் நடிக்க வருகிறார்கள். லண்டன் நடிகை எமி ஜாக்சன் தமிழில் பிரபல நடிகையாக உயர்ந்துள்ளார். சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்தில் உக்ரைனை சேர்ந்த மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடித்து இருந்தார். சன்னிலியோன் கனடாவில் இருந்து வந்து நடித்துக்கொண்டு இருக்கிறார். 'நானே வருவேன்' படத்தில் தனுஷ் ஜோடியாக சுவீடன் நடிகை எல்லி அவ்ரம் நடித்துள்ளார்.
தற்போது இலங்கையை சேர்ந்த சிங்கள நடிகையான தசுனி தமிழில் 'அண்ணே' என்ற பெயரில் தயாராகும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். 'அண்ணே' படத்தில் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடித்து டைரக்டும் செய்கிறார். இவர் அகத்தியன் இயக்கிய 'ராமகிருஷ்ணா' படத்தில் நாயகனாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து இருக்கிறார்.
அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து 'அண்ணே' படம் உருவாகிறது. அக்ஷயா, பேலிஜா, பவர் ஸ்டார் சீனிவாசன், சாம்ஸ், லட்சன், ரஞ்சன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யோகிபாபு நடிக்கவும் பேசி வருகிறார்கள். இந்த படம் 'அய்யா' என்ற பெயரில் சிங்கள மொழியிலும் தயாராகிறது.