< Back
சினிமா செய்திகள்
நடிகர் சிவகார்த்திகேயனை புகழ்ந்த பிரபல தெலுங்கு நடிகை
சினிமா செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயனை புகழ்ந்த பிரபல தெலுங்கு நடிகை

தினத்தந்தி
|
26 March 2024 11:57 PM IST

சிவகார்த்திகேயனின் வாழ்க்கை தனக்கு மிகவும் இன்ஸ்பிரேஷனாக இருப்பதாக நடிகை ஸ்ரீலீலா கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான அயலான் படத்தின் வெற்றி அவருக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ராஜ் குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்த முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில், சாய் பல்லவி இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசைமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் 'எஸ்.கே 23' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கன்னட நடிகை ருக்மினி வசந்த் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

தமிழ் சினிமாவின் அடுத்த இளைய தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தபின் அவரது இடத்தை சிவகார்த்திகேயன் திரையிலும் மக்கள் மனதிலும் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றபடி தனது ஒவ்வொரு படத்திலும் வளர்ச்சியை நோக்கி நகர்ந்தபடி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. சமீப காலமாக ஏராளமான படங்கள் பல முன்னணி பிரபலங்களுடன் நடித்து வருகிறார். மகேஷ்பாபுவுடன் ஸ்ரீலீலா இணைந்து நடித்த குண்டூர் காரம் என்ற படம் 2 மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்து வெற்றியை பெற்றது. படத்தில் மகேஷ்பாபுவுடன் 'குர்ச்சி மடத்த பெட்டி' என்ற பாடலுக்கு ஸ்ரீலீலா ஆடிய நடனம் ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா மற்றும் சதீஷ் ஆகியோர் தனியார் கல்லூரியின் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.என்னுடைய வாழ்க்கை மற்றும் சினிமா பயணத்திற்கு எனக்கு ரொம்ப இன்ஸ்பிரேஷன் ஆக இருப்பது சிவகார்த்திகேயன் என்று தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீலீலா மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து குண்டூர் காரம் படத்தின் பாடலுக்கு நடனமாடினார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகை ஸ்ரீலீலாவுடன் சிவகார்த்திகேயன் நடனமாடிய வீடியோ தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அவருக்கு பரவலான ஆதரவை பெற்றுத் தந்துள்ளது.

மேலும் செய்திகள்