என் உடல்நிலை குறித்து தவறான வதந்தி பரப்புவதா? நடிகை லட்சுமி வருத்தம்
|லட்சுமி உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தி தீயாக பரவியது. இதற்கு விளக்கம் அளித்து லட்சுமி ஒரு ஆடியோ வெளியிட்டு உள்ளார்.
பழம்பெரும் நடிகை லட்சுமி. இவர் 1961-ல் வெளியான 'ஸ்ரீ வள்ளி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், சிவகுமார், முத்துராமன் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில்லட்சுமி உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தி தீயாக பரவியது. இதற்கு விளக்கம் அளித்து லட்சுமி ஒரு ஆடியோ வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் பேசும்போது, "என்னை பற்றி தவறான வதந்தி பரவி உள்ளது. பிறந்தவர்கள் இறந்துதான் ஆக வேண்டும். இதற்கெல்லாம் பயப்படவில்லை. கவலைப்படவில்லை. வேலை வெட்டி இல்லாதவர்கள் இதை மெனக்கெட்டு பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்காக வருத்தப்பட்டு பலர் என்னை அழைத்து விசாரித்தனர். இவ்வளவு பேர் நம்மீது அக்கறையோடு இருக்கிறார்கள் என்று அறியும்போது மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் ஆசிர்வாதத்தாலும் இறைவன் அருளாலும் ரொம்ப ஆரோக்கியமாக இருக்கிறேன். ஒரு கவலையும் இல்லை'' என்று கூறியுள்ளார்.