< Back
சினிமா செய்திகள்
Spider-Man 4: Will the crew decide to change the heroine?
சினிமா செய்திகள்

'ஸ்பைடர் மேன் 4': கதாநாயகியை மாற்ற படக்குழு முடிவா?

தினத்தந்தி
|
30 Sept 2024 9:02 AM IST

ஸ்பைடர் மேன் 4 குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது

சென்னை,

இந்தியாவில், ஹாலிவுட் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக, மார்வெல் படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் மார்வெல் படைப்புகளுள் ஒன்றாக உருவானதுதான், ஸ்பைடர் மேன் படங்கள்.

இதன் முதல் பாகமான ஸ்பைடர் மேன்: ஹோம் கம்மிங்கில் டாம் ஹாலண்ட் கதாநாயகனாக நடித்திருந்தார், அதனைத்தொடர்ந்து, ஸ்பைடர் மேன் பார் பிரம் ஹோம் படமும், கடைசியாக 3-வது பாகமாக ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படமும் வெளியானது. இப்படங்களில் கதாநாயகியாக ஜெண்டயா நடித்திருந்தார். இந்த 3 பாகங்களையும் ஜான் வாட்ஸ் இயக்கி இருந்தார்.

இதனையடுத்து 4-வது பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், 4-வது பாகம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் கதாநாயகியையும், இயக்குனரையும் மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் டேனியல் க்ரெட்டனுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.


மேலும் செய்திகள்