'கோட்' படத்தின் `ஸ்பார்க்' பாடல் வெளியானது
|விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தின் மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை,
நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் விஜய். மேலும், மகன் விஜயை ஹாலிவுட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் இளமையானவராக காட்டி இருக்கிறார் வெங்கட்பிரபு. எனவே, இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் முதல் பாடலான 'விசில் போடு' வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இரண்டாவது பாடலான 'சின்ன சின்ன கண்கள்' விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது.
இந்நிலையில், இப்படத்தின் 3-வது பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் 3வது பாடலுக்கான புரோமோ வீடியோ வெளியாகி வைரலானது. இப்பாடலிற்கு ஸ்பார்க் என தலைப்பிட்டுள்ளனர். இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விருஷா பாலி இணைந்து பாடியுள்ளனர். கங்கை அமரன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
பாடலில் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி இணைந்து நடனமாடியுள்ளனர். இந்த பாடலில் விஜய் மிகவும் இளமையான தோற்றத்தில் உள்ளார். பாடலில் விஜயின் தோற்றத்தை டி ஏஜிங் தொழில் நுட்பத்தை உபயோகித்து இளம் தோற்றத்தில் காட்சி படுத்தியுள்ளனர்.