தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் தொடங்கியது...!
|தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
சென்னை,
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் தொடங்கியது. கூட்டத்திற்கு சங்க தலைவர் நாசர் தலைமை தாங்க உள்ளார்.
மேலும் இக்கூட்டத்தில் 2022-23ம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு-செலவு கணக்கை துணைத்தலைவர் கருணாஸ் சமர்ப்பிக்க உள்ளார். எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்து பொருளாளர் கார்த்தியும், சங்கத்தின் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்து பொதுச்செயலாளர் விஷாலும் உரையாற்ற உள்ளார்கள்.
கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், அஜய் ரத்தினம், பசுபதி, ஜூனியர் பாலையா, லதா சேதுபதி, பிரசன்னா, நந்தா, ரமணா, தளபதி தினேஷ், சரவணன், பிரேம்குமார், சீனிவாச ரெட்டி, ரத்தின சபாபதி, பிரகாஷ், வாசுதேவன், ஹேமச்சந்திரன், காளி முத்து உள்பட முன்னணி நடிகர்-நடிகைகள், நாடக கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொள்ள வந்துள்ளனர்.