< Back
சினிமா செய்திகள்
நயன்தாராவுக்கு எதிராக மராட்டியத்திலும் வழக்கு
சினிமா செய்திகள்

நயன்தாராவுக்கு எதிராக மராட்டியத்திலும் வழக்கு

தினத்தந்தி
|
13 Jan 2024 12:00 AM GMT

நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் மீது, பல்வேறு மாநிலங்களில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

தானே,

தமிழில் முன்னணி நடிகையான நயன்தாரா நடித்த அன்னபூரணி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில், கடவுள் ராமருக்கு எதிராகவும், இந்து மதத்திற்கு எதிராகவும் காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் மீது, பல்வேறு மாநிலங்களில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மத்திய பிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து மராட்டியத்தில் தானேவைச் சேர்ந்த மிரா பயேந்தர், போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில் நயன்தாரா உட்பட படக்குழுவினர் எட்டு பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர். இரு பிரிவினரிடையே மோதலை துாண்டுவது, மத உணர்வுகளை புண்படுத்துவது, வழிபாட்டு தலத்தை அவமதிப்பது, கூட்டாக குற்றச் செயலில் ஈடுபடுவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்