சுசித்ராவுடன் பாடிய சவுந்தர்யன்
|'பொருளு' என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இந்தப் படத்தை ஏழுமலை டைரக்டு செய்கிறார். படம் பற்றி அவர் கூறும்போது, "ஆதரவற்ற ஒருவன் நடைபாதையில் தங்கி இருக்கிறான். அதே நடைபாதையில் வசிக்கும் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். இதைக்காணும் அந்த இளைஞன் அவர்களை நல்வழிப் படுத்துகிறான். இதுவே படத்தின் கதை'' என்றார்.
இந்தப் படத்துக்காக ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியாரின் பாடலை ஓடி விளையாடும் பாப்பா, நீ ஓய்ந்திருக்க பிடிக்காத பாப்பா, பாப்பா... கூடி விளையாடும் பாப்பா, இளம் குமரிக்கு பிடிப்பது தாழ்ப்பாள் தாம்பா...ஓடி விளையாடு பாப்பா..பாய் பாய் பாய் பாய் கோரையில் பின்னிய பாய் பாய்...வேணும் இன்னொரு பாய் என இசையமைப்பாளர் சவுந்தர்யன் மாற்றி எழுதி அவரே இசையமைத்து பாடகி சுசித்ராவுடன் இணைந்து பாடி இருக்கிறார்.
`சம்பா நாத்து சாரக் காத்து', `காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு', `கண்கள் ஒன்றாக கலந்ததால்', `ஆத்தாடி என்ன உடம்பு', `அடியே அடி சின்ன புள்ள', `எட்டு மடிப்பு சேலை இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோல', `உள்ளமே உனக்குத்தான் உசுரே உனக்குத்தான்' என்று பல பிரபலமான பாடல்களுக்கு இசையமைத்தவர் சவுந்தர்யன் என்பது குறிப்பிடத்தக்கது.