< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஸ்ரீரங்கம் கோவிலில் சவுந்தர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்
|21 Aug 2024 7:11 PM IST
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சாமி திருக்கோவிலுக்கு கணவருடன் சென்ற சவுந்தர்யா ரஜினிகாந்த்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். அவர் 'கோவா' திரைப்படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பாளராகவும் ஆனார். பின்னர், ரஜினியின் 'கோச்சடையான்', தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி 2' போன்ற படங்களை இயக்கி பிரபலமானார்.
இந்நிலையில் இன்று திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு சென்ற சவுந்தர்யா ரஜினிகாந்த் அவருடைய கணவர் விசாகனுடன் இணைந்து சாமி தரிசனம் செய்தார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சவுந்தர்யா- விசாகன் தம்பதியினருக்கு திருச்சி ரஜினி ரசிகர்கள் சார்பில் பெருமாள் புகைப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.