< Back
சினிமா செய்திகள்
அசோக் செல்வனின் வெப் சீரிஸ் தொடரை தயாரிக்கிறார் சவுந்தர்யா ரஜினிகாந்த்
சினிமா செய்திகள்

அசோக் செல்வனின் வெப் சீரிஸ் தொடரை தயாரிக்கிறார் சவுந்தர்யா ரஜினிகாந்த்

தினத்தந்தி
|
21 March 2024 2:37 PM IST

இந்த தொடருக்கு 'கேங்க்ஸ் குருதி புனல்' என பெயரிட்டுள்ளனர்.

சென்னை,

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த படம் புளூ ஸ்டார். அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இப்படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது அசோக் செல்வன் 'எமக்கு தொழில் ரொமேன்ஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அசோக் செல்வன் தற்போது புதிய வெப் சீரிஸ் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடரில் சத்யராஜ், நாசர், நிமிஷா சஜயன், ரித்திகா சிங், ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 70-களின் பின்னணியில் நடக்கும் இக்கதை இரு குழுக்களுக்கிடையிலான மோதலாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரை சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் தொடரை இயக்குநர் நோவா இயக்கியுள்ளார். இந்த தொடருக்கு 'கேங்க்ஸ் குருதி புனல்' என பெயரிட்டுள்ளனர். இந்த வெப் சீரிஸ் விரைவில் அமேசான் ப்ரைம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்