< Back
சினிமா செய்திகள்
கருடன் பட வெளியீட்டுத் தேதி நாளை அறிவிப்பு
சினிமா செய்திகள்

'கருடன்' பட வெளியீட்டுத் தேதி நாளை அறிவிப்பு

தினத்தந்தி
|
12 May 2024 8:45 PM IST

நடிகர் சசிகுமார், சூரி நடிப்பில் உருவான கருடன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி நாளை வெளியாக உள்ளது.

சென்னை,

நகைச்சுவை நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம்தான் கருடன். இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனாகவும் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

படத்துக்கான கதையை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் எழுத துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இப்படம் இம்மாதம் (மே) வெளியாகுமென தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை நாளை(மே 13) மாலை 6 மணிக்கு அறிவிக்க உள்ளது.

மேலும் செய்திகள்