< Back
சினிமா செய்திகள்
டிரெண்டாகும் மாளவிகா நாயரின் கிருஷ்ணம் பிரணயா சகி பட பாடல்கள்
சினிமா செய்திகள்

டிரெண்டாகும் மாளவிகா நாயரின் 'கிருஷ்ணம் பிரணயா சகி' பட பாடல்கள்

தினத்தந்தி
|
24 July 2024 6:24 PM IST

'கிருஷ்ணம் பிரணயா சகி' படத்தின் மூலம் மாளவிகா நாயர் கன்னடத்தில் அறிமுகமாகியுள்ளார்.

சென்னை,

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மாளவிகா நாயர். பின்னர் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'குக்கூ' திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றார்.

இவர் தற்போது ஸ்ரீனிவாஸ் ராஜு இயக்கத்தில் 'கிருஷ்ணம் பிரணயா சகி' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் மாளவிகா நாயர் கன்னடத்தில் அறிமுகமாகியுள்ளார். இதில், சரண்யா ஷெட்டி, ஸ்ரீனிவாச மூர்த்தி, ரங்காயண ரகு, சாது கோகிலா, சஷிகுமார், பாவனா, ஸ்ருதி மற்றும் அசோக் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கிடையில் சின்னம்மா, துவாபரா உள்ளிட்ட மூன்று பாடல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டன. இந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து டிரெண்டாகி வருகின்ரன. இதில், துவாபரா பாடலை " ச ரி க ம ப" போட்டியாளர் ஜஸ்கரன் சிங் பாடியுள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்