< Back
சினிமா செய்திகள்
துணிவு படத்தில் அனிருத் பாடிய பாடல்... ஜிப்ரான் கொடுத்த அப்டேட்
சினிமா செய்திகள்

'துணிவு' படத்தில் அனிருத் பாடிய பாடல்... ஜிப்ரான் கொடுத்த அப்டேட்

தினத்தந்தி
|
5 Nov 2022 9:17 PM IST

துணிவு படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து 3-வது முறையாக அஜித்-எச்.வினோத் கூட்டணியில் 'துணிவு' படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொகைன், அமீர், பாவனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னை, விசாகப்பட்டினம், பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வந்தது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரும் என தகவல்கள் வெளியான நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே 'துணிவு' படத்தின் டப்பிங் பணிகள் அண்மையில் தொடங்கியது. இது குறித்த புகைப்படங்களை நடிகை மஞ்சு வாரியார் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் நடிகர் அஜித்குமார், 'துணிவு' படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக தகவல் வெளியான நிலையில், படத்தின் டீசர், டிரெய்லர், ரிலீஸ் தேதி உள்ளிட்ட அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் படத்தின் பாடல் குறித்த அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டுள்ளார். அதன்படி துணிவு படத்தில் இடம்பெறும் 'சில்லா சில்லா' என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளதாகவும், வைஷாக் என்பவர் பாடல் வரிகளை எழுதி உள்ளதாகவும் ஜிப்ரான் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பான புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். ஒருபுறம் நடிகர் விஜய்யின் 'வாரிசு' படத்தில் இருந்து 'ரஞ்சிதமே' பாடல் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், அஜித்தின் துணிவு பட பாடல் குறித்த அப்டேட் கிடைத்திருப்பது அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இருவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.



மேலும் செய்திகள்