வேலைக்காரி உடன் ரகசிய உறவில் பிறந்த மகன்... மனம் திறந்த பிரபல நடிகர்
|பிரபல ஹாலிவுட் நடிகரின் ரகசிய உறவால் அவரது மனைவிக்கும், வேலைக்காரிக்கும் 5 நாள் இடைவெளியில் குழந்தை பிறந்து உள்ளது.
நியூயார்க்,
பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்க்வார்ஜெனேகர் (வயது 75). இவரது மனைவி மரியா ஷிவெர். நடிகர் அர்னால்டு தனது சொந்த வாழ்க்கையை பற்றி 3 பாகங்கள் கொண்ட ஆவண தொடராக வெளியிட உள்ளார்.
வருகிற 7-ந்தேதியில் (நாளை) இருந்த வெளியிட உள்ள இந்த ஆவணத்தில், அவரது வாழ்வில் ஏற்பட்ட ரகசிய உறவு மற்றும் அதன் விளைவுகளை பற்றி வெளிப்படுத்தி உள்ளார்.
1996-ம் ஆண்டு அர்னால்டின் வீட்டு பணியாளாக இருந்த மில்ட்ரெட் பயீனாவுக்கும், அர்னால்டுக்கும் இடையே ரகசிய உறவு ஏற்பட்டது. ஆனால், இந்த விவரம் அர்னால்டின் மனைவி மரியாவுக்கு தெரியவில்லை.
இந்த நிலையில், 9 மாதங்களுக்கு பின்னர் கர்ப்பிணியான மில்ட்ரெடுக்கு குழந்தை பிறந்து உள்ளது. மரியாவுக்கு கிறிஸ்டோபர் என்ற மகன் பிறந்து 5 நாட்களில் மில்ட்ரெட் ஆண் குழந்தையை பெற்றெடுத்து உள்ளார்.
அந்த குழந்தைக்கு ஜோசப் என பெயரிட்டு உள்ளனர். இந்த குழந்தைக்கு தந்தை அர்னால்டு என்பதோ மற்றும் ஜோசப்பின் சகோதரர் கிறிஸ்டோபர் என்பதோ அப்போது ஒருவருக்கும் தெரியவில்லை.
2010-ம் ஆண்டில் 13 வயது ஆகும் வரை ஜோசப்புக்கு தனது உயிரியியல் தந்தை பற்றிய விவரம் தெரியவில்லை. ஆனால், வளர வளர ஜோசப், ஏறக்குறைய அர்னால்டின் சாயலில் இருந்து உள்ளார்.
இதனை மரியா கவனித்து உள்ளார். இதன்பின் ஒரு நாள் கவுன்சிலிங்கில் இருந்தபோது, ஆலோசகர் அர்னால்டிடம் ஒரு விசயம் பற்றி அறிந்து கொள்ள மரியா விரும்புகிறார் என கூறியுள்ளார்.
ஜோசப்பின் தந்தை நீங்களா? என தெரிந்து கொள்ள மரியா விரும்புகிறார் என கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார். அப்போது இருதயம் நின்று விட்டது போன்று உணர்ந்தேன் என அர்னால்டு கூறியுள்ளார்.
அதன்பின் மனைவி மரியாவிடம் உண்மைகளை கூறியுள்ளார். இந்த விவரங்களை தனது புதிய ஆவண தொடரில் அர்னால்டு விவரித்து உள்ளார். ஆரம்பத்தில் இதுபற்றி அர்னால்டு பெரிய அளவில் கவலை கொள்ளவில்லை.
எல்லாம் சரியாகி விடும் என்ற நினைப்பில் இருந்து உள்ளார். வயது முதிர, முதிர அவருக்கு தெளிவு பிறந்து உள்ளது. இவ்வளவு காலம் எப்படி இந்த விசயம் யாருக்கும் தெரியாமல் ரகசியம் காத்து வந்தீர்கள்? என்றளவில் இந்த விசயம் பெரிய விவகாரம் ஆகி விட்டது.
இதன்பின்னர், வீட்டு பணியாளருடன் ரகசிய தொடர்பில் இருந்த தகவலை அர்னால்டு ஒப்பு கொண்டு உள்ளார். அது தனது பெரிய தவறு என கூறுகிறார்.
இதனால், அவரது குடும்பத்திற்கு பெரிய வலியை அவர் உண்டாக்கி விட்டார் என உணர்ந்து இருக்கிறார். இவரது மனைவி மரியா பாதிக்கப்பட்டார். குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர். ஜோசப், அவரது தாயார் என இந்த செயலால் ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டனர். இந்த வேதனையுடனேயே மீதமுள்ள வாழ்நாளை வாழ போகிறேன் என அர்னால்டு தெரிவித்து உள்ளார்.