சினிமா துறையில் கஷ்டம் தரக்கூடிய சில விஷயங்கள் நடந்தன - நடிகை அபிராமி
|நடிகை அபிராமி திருமணத்துக்கு பிறகு குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் கமல்ஹாசனின் விருமாண்டி படத்தில் நடித்து பிரபலமானவர் அபிராமி. வானவில், சமுத்திரம், தோஸ்த், சார்லி சாப்ளின் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். மலையாள படங்களிலும் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தும் வளர்க்கிறார்.
இந்த நிலையில், சினிமா துறையில் நடிகைகள் பலர் உருவக்கேலியை எதிர்கொள்வது போன்ற கசப்பான அனுபவம் அபிராமிக்கும் ஏற்பட்டு உள்ளது
இதுகுறித்து அபிராமி கூறும்போது, "உடல்ரீதியாக விமர்சனங்களை எதிர்கொண்டேன். என்னுடைய உயரத்தை வைத்து கேலி செய்து இருக்கிறார்கள். நீ மிகவும் உயரமாக இருக்கிறாய். அதனால் நிறைய படவாய்ப்புகள் இல்லாமல் போய் இருக்கிறது" என்றனர்.
மேலும் எனது தாடை நீளமாக இருப்பதாக கேலி செய்தனர். சிறுவயதில் தாடையை பிடித்து இழுத்து இழுத்து பார்த்து இருக்கிறார்கள். அதுவும் நீளமாக காரணமாக இருக்கலாம். எனக்கு நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாது. சட்டென்று கண்ணீர் வந்து விடும். சினிமா துறையில் எனக்கு கஷ்டம் தரக்கூடிய சில விஷயங்கள் நடந்துள்ளன'' என்றார்.