சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
மங்கி மேன்: ஹாலிவுட்டில் அறிமுகமாகும் பொன்னியின் செல்வன் பட நடிகை
|14 March 2024 6:45 PM IST
பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த நடிகை சோபிதா துலிபாலா ஹாலிவுட்டில் நடித்துள்ள ”மங்கி மேன்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.
நடிகை சோபிதா துலிபாலா நடிப்பில் 'மங்கி மேன்' ஹாலிவுட் திரைப்படம் வெளியாக உள்ளது. பிரபல இயக்குநர் தேவ் படேல் இயக்கி இருக்கும் இந்தப்படத்தை யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. மங்கி மேன் திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. மங்கி மேன் படம் அடுத்த மாதம் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
டெக்சாஸின் ஆஸ்டினில் உள்ள பாரமவுண்ட் தியேட்டரில் ''மங்கி மேன்'' படத்திற்கான அறிமுக விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் சோபிதா துலிபாலா, இளஞ்சிவப்பு நிற கவுனை அணிந்து நடந்து சென்றார்.
சோபிதா துலிபாலா, தன்னுடைய அசத்தலான உடையை உருவாக்கிய ஆடைவடிவமைப்பாளர் அமித் அகர்வாலுக்கு தனது நன்றி என இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.