< Back
சினிமா செய்திகள்
Sobhita Dhulipala says she is too scared to watch Mammootty’s ‘Bramayugam’

image courtecy:instagram@sobhitad

சினிமா செய்திகள்

'இந்த படத்தை பார்க்க பயமாக இருந்தது' - சோபிதா துலிபாலா

தினத்தந்தி
|
20 May 2024 10:05 AM IST

மங்கிமேன் என்ற ஹாலிவுட் படத்தில் சோபிதா துலிபாலா நடித்துள்ளார்.

சென்னை,

தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சோபிதா துலிபாலா. இவர் தற்போது தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். மங்கிமேன் என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை சோபிதா துலிபாலா கலந்துகொண்டார். அப்போது அவரிடம் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 3 படங்கள் குறித்து கேட்டனர். அதற்கு அவர், மஞ்சுமெல் பாய்ஸ், அடுத்ததாக நான் நடித்த மங்கி மேன் மற்றும் மம்முட்டி நடித்த பிரமயுகம். இவ்வாறு கூறினார்.

மேலும், பிரமயுகம் படம் குறித்து கூறுகையில், எனக்கு பிரமயுகம் படத்தை பார்க்க மிகவும் பயமாக இருந்தது. ஆனால், 2 முதல் 3 பேருடன் பார்த்ததால் நான் பயப்படவில்லை. என்றார்

மேலும் செய்திகள்