< Back
சினிமா செய்திகள்
மீண்டும் நடிக்க வந்த சினேகா
சென்னை
சினிமா செய்திகள்

மீண்டும் நடிக்க வந்த சினேகா

தினத்தந்தி
|
9 July 2022 11:03 AM IST

2 வருட இடைவெளிக்கு பிறகு சினேகா மீண்டும் படங்களில் தீவிரமாக நடிக்க தயாராகி உள்ளார்.

தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் பிரசன்னாவுடன் ஜோடி சேர்ந்தபோது அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். கடைசியாக 2020-ம் ஆண்டு ஜனவரியில் வெளியான பட்டாஸ் படத்தில் தனுசுடன் நடித்து இருந்தார். அதன்பிறகு படங்களில் பார்க்க முடியவில்லை. சினேகாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சினிமாவை விட்டு அவர் ஒதுங்கி விட்டாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். சமீபத்தில் உடல் எடையை குறைத்து இளமை தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் 2 வருட இடைவெளிக்கு பிறகு சினேகா மீண்டும் படங்களில் தீவிரமாக நடிக்க தயாராகி உள்ளார். தமிழில் புதிய படமொன்றில் நடிக்கிறார். மலையாள படத்திலும் மம்முட்டி ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மம்முட்டியுடன் துருப்பு குலான், த கிரேட் பாதர் ஆகிய படங்களில் நடித்து இருந்தார்.

மேலும் செய்திகள்