< Back
சினிமா செய்திகள்
மீண்டும் மலையாள படத்தில் சினேகா
சினிமா செய்திகள்

மீண்டும் மலையாள படத்தில் சினேகா

தினத்தந்தி
|
10 Oct 2022 12:23 PM IST

சினேகா மீண்டும் மம்முட்டியுடன் மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

நடிகை சினேகா திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்து தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடிக்கிறார். 4 வருடங்களுக்கு முன்பு மம்முட்டியுடன் தி கிரேட் பாதர் என்ற மலையாள படத்தில் நடித்திருந்த சினேகா தற்போது மீண்டும் மம்முட்டியுடன் கிறிஸ்டோபர் என்ற மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த படத்தில் நடிப்பது குறித்து சினேகா கூறும்போது, ''எனக்கு பிடித்த கதைகளில் மட்டுமே நடிக்கிறேன். ஒரு நல்ல படத்தின் மூலம் மீண்டும் மலையாள படத்தில் நடிக்க வேண்டும் என்று காத்து இருந்தேன். அது இந்த படம் மூலம் அமைந்துள்ளது. இயக்குனர் உன்னி கிருஷ்ணன் என்னை அணுகி கதையை சொன்னதும் மறுக்க முடியவில்லை. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். என்ன கதாபாத்திரம் என்பதை இப்போது சொல்ல முடியாது. இரண்டு காலகட்டங்களில் இரண்டு விதமான தோற்றங்களில் வருகிறேன், மம்முட்டியுடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சினிமா பற்றிய நிறைய விஷயங்களை மம்முட்டியிடம் இருந்து கற்றுக் கொண்டேன்" என்றார்.

மேலும் செய்திகள்