< Back
சினிமா செய்திகள்
சின்னத்திரை நடிகர்களான லதா ராவ் - ராஜ்கமல் தம்பதி வீட்டில் திருட்டு
சினிமா செய்திகள்

சின்னத்திரை நடிகர்களான லதா ராவ் - ராஜ்கமல் தம்பதி வீட்டில் திருட்டு

தினத்தந்தி
|
9 July 2023 2:46 PM IST

சின்னத்திரை நடிகர்களான லதா ராவ் - ராஜ்கமல் தம்பதி வீட்டில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

சென்னை,

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1 தொடங்கி, பல நாடகங்களில் நடித்து கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் தம்பதியாக வலம் வருபவர்கள் ராஜ்கமல் - லதா ராவ் தம்பதி. இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில், சென்னை, மதுரவாயில் பகுதியில் வீடு ஒன்றை வாங்கி படப்பிடிப்புக்காக இவர்கள் உபயோகித்து வரும் நிலையில், நேற்று முன் தினம் இவர்களது வீட்டின் பின் பக்க பூட்டை உடைத்து 65 இன்ச் விலை உயர்ந்த தொலைக்காட்சியை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். இதனையடுத்து ராஜ்கமல் - லதா ராவ் தம்பதி மதுரவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ராஜ் கமல் - லதா ராவ் தம்பதி அளித்த புகாரின் பேரில் மதுரவாயல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்