பெரிய படங்களால் சிறு படங்கள் பாதிப்பு - டைரக்டர் பேரரசு
|பெரிய படங்களால் சிறிய படங்கள் பாதிக்கப்படுகின்றன என டைரக்டர் பேரரசு தெரிவிரித்து உள்ளார்.
முருகா அசோக், காயத்ரி நடிப்பில் 'விழித்தெழு' என்ற படம் தயாராகி உள்ளது. இந்த படத்தை ஏ.தமிழ்ச்செல்வன் டைரக்டு செய்துள்ளார். சி.எம்.துரை ஆனந்த் தயாரித்துள்ளார். விழித்தெழு படவிழா நிகழ்ச்சியில் டைரக்டர் பேரரசு கலந்து கொண்டு பேசும்போது, '''தமிழன் இன்று விழிப்பாக இருக்க வேண்டிய காலம். தமிழ்நாடு என்றாலும் தமிழகம் என்றாலும் ஒன்றுதான். தமிழகம் என்றாலும் வாழ்க என்று சொல்ல வேண்டும். தமிழ்நாடு என்றாலும் வாழ்க என்றுதான் சொல்ல வேண்டும்.
கட்சிகளுக்குள் ஆயிரம் பிரிவுகள் இருக்கலாம். ஆனால் தமிழன் தமிழனாகவே இருக்க வேண்டும். தமிழ் அரசியலில் தமிழன் சிக்கிக் கொள்ளக்கூடாது. நான் நிறைய சிறிய பட்ஜெட் படவிழாக்களில் கலந்து கொள்கிறேன். இன்று பெரிய படங்களால் சிறிய படங்கள் பாதிக்கப்படுகின்றன. பெரிய படங்கள் வெளியாகும் போது சிறுபட்ஜெட் படங்களை வெளியிட முடியாது. பெரிய படங்கள் திரைக்கு வரும்போது இசை வெளியீட்டு விழாக்களை கூட நடத்தக்கூடாதா''என்றார்