< Back
சினிமா செய்திகள்
SK 24: Sivakarthikeyan, SJ Suryah, Rashmika Mandanna Starrer Titled Boss
சினிமா செய்திகள்

'டான்' இயக்குனருடன் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்?

தினத்தந்தி
|
8 July 2024 10:45 AM IST

சிவகார்த்திகேயனின் 24-வது படம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'அமரன்' படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனைத்தொடர்ந்து, இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு எஸ்கே23 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் 24-வது படம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட் அடித்த 'டான்' படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இதில், கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இந்த படத்திற்கு 'பாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மெகா ஹிட் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்