< Back
சினிமா செய்திகள்
இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் பிறந்தநாள்: வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த படக்குழு
சினிமா செய்திகள்

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் பிறந்தநாள்: வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த படக்குழு

தினத்தந்தி
|
26 Sept 2024 2:54 PM IST

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு ‘எஸ்கே 23’ படக்குழு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளது.

சென்னை,

அஜித் குமார் நடிப்பில் கடந்த 2001ம் ஆண்டு வெளியான தீனா படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் ஏ.ஆர். முருகதாஸ். விஜயகாந்தை வைத்து முருகதாஸ் இயக்கிய ரமணா படம் வரவேற்பினைப் பெற்றது. நடிகர் விஜய்க்கு துப்பாக்கி, கத்தி, சர்கார் எனத் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் இயக்கிய தர்பார் சுமாரான வரவேற்பினைப் பெற்றது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுடன் 'எஸ்கே 23' என்ற படத்தினை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்கிடையே, திடீரென நடிகர் சல்மான் கானின் புதிய படத்தை ஏ. ஆர். முருகதாஸ் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. சிக்கந்தர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் 2025-ம் ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகுமென போஸ்டரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முருகதாஸ் பிறந்த நாளுக்கு 'எஸ்கே 23' படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ லட்சுமி மூவிஸ் படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்..

மேலும் செய்திகள்