'பொதிகை மலையை பிரிந்து'- பாடியது வைரலானது குறித்து எஸ்.ஜே.சூர்யா பேச்சு
|நேர்காணல் ஒன்றில் எஸ்.ஜே.சூர்யா “பொதிகை மலையை பிரிந்து" என்ற பாடலை பாடியிருந்தார்.
சென்னை,
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனராகவும் கலக்கி வருகிறார். கடந்த 1999-ம் ஆண்டு வெளியான 'வாலி' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இந்த படத்தின் வெற்றி அவரை நட்சத்திரமாக உயர்த்தியது. குஷி , நியூ, அன்பே ஆருயிரே, இசை போன்றவை இவர் இயக்கிய மற்ற படங்களாகும் . ஸ்பைடர், மெர்சல் , மாநாடு, டான், மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
சமீபத்தில், நேர்காணல் ஒன்றில் எஸ்.ஜே.சூர்யா "பொதிகை மலையை பிரிந்து" என்ற பாடலை பாடியிருந்தார். இந்த வீடியோ மீம்களாக வைரலானது. இந்நிலையில், இது குறித்து மற்றொரு நேர்காணல் ஒன்றில் எஸ்.ஜே.சூர்யா ஜாலியாக பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில்,
"எந்த டிரோல்களிலும் சிக்காமல் நல்ல பையனா சுத்திக்கொண்டு இருந்தேன். கொஞ்சம் அசதியா இருக்கும்போது நேர்காணலில் பாட சொல்லி விட்டார்கள். அன்று பாடிய பிறகு நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே.. வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு துக்கப்பட்டு துயரப்பட வைத்துவிட்டார்கள், என்றார்