எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள 'பொம்மை' படத்தின் புதிய அப்டேட்
|எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள 'பொம்மை' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பொம்மை'. இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரிச்சர்டு எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரொமான்ஸ் திரில்லர் வகை கதையம்சம் கொண்ட திரைப்படமாக பொம்மை படம் உருவாகியுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பொம்மை' திரைப்படத்தின் முதல் பாடலான 'முதல் முத்தம்' என்ற பாடல் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று நடிகர் எஸ்.ஜே.சூர்யா தன்னுடைய சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.