< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
நடிப்பு ராட்சசனாக எஸ்.ஜே.சூர்யா
|5 Jun 2022 3:25 PM IST
டைரக்டராக அறிமுகமாகி, கதாநாயகனாக உயர்ந்து, தற்போது வில்லனாகவும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் எஸ்.ஜே.சூர்யா.
விஜய் நடித்த 'மெர்சல்', சிம்பு நடித்த 'மாநாடு', சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' ஆகிய படங்களில் எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் நடிப்பு பேசப்பட்டது. பெரியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பாராட்டினார்கள்.
'நடிப்பு ராட்சசன்' என்று பாராட்டப்படும் அவர், ராதாமோகன் இயக்கத்தில், 'பொம்மை' என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். ''இந்த படத்தின் டிரைலர் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 'பொம்மை' படம் 600 தியேட்டர்களில் திரையிடப்பட இருக்கிறது'' என்று டைரக்டர் ராதாமோகன் தெரிவித்தார்.