'கேம் சேஞ்சர்'- ரிலீஸ் குறித்து அப்டேட் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா
|'கேம் சேஞ்சர்' படத்தின் ரிலீஸ் குறித்து எஸ்.ஜே.சூர்யா அப்டேட் கொடுத்துள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவர் தற்போது கமலை வைத்து இந்தியன் 2 மற்றும் 3 படங்களையும், ராம் சரணை வைத்து 'கேம் சேஞ்சர்' படத்தையும் இயக்கி வருகிறார். இதில், இந்தியன் 2 படம் வரும் 12- தேதி வெளியாக உள்ளது.
இந்த மூன்று படங்களிலும் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில், நடந்த 'இந்தியன் 2' படத்தின் தெலுங்கு பிரீ-ரிலீஸ் நிகழ்வின்போது, ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து 'கேம் சேஞ்சர்' படத்தின் ரிலீஸ் குறித்து அப்டேட் கொடுத்தார். அப்போது அவர் கூறுகையில்,
'வரும் 12-ம் தேதி இந்தியன் 2 படத்தைப் அனைவரும் பார்க்கவும். 'இந்தியன் 2' படத்தின் வெற்றி நிகழ்வின்போது 'இந்தியன் 3' டிரெய்லரை வெளியிட்டு அதன் வெளியீட்டு தேதியை அறிவிப்போம். ஆனால் அதற்கு முன் 'கேம் சேஞ்சர்' வெளியாகும், என்றார்.
மேலும் கூறுகையில், "நான் இந்தியன் 2-ல் சிறிது நேரம் வருவேன். படம் நன்றாக வந்துள்ளது. ஆனால் இந்தியன் 3 மற்றும் கேம் சேஞ்சரில் அதிக நேரம் காணப்படுவேன். நான் நிச்சயமாக அனைவரையும் ஆச்சரியப்படுத்துவேன், என்றார்.