ஷாருக்கானின் ஜவானில் உலகத்தரம் வாய்ந்த 6 பைட் மாஸ்டர்கள்
|பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மும்பை
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பாஸ்ட் அண்ட் ப்யூரிஸ், அவெஞ்சர்ஸ் மற்றும் கேப்டன் அமெரிக்கா போன்ற ஹாலிவுட் படங்களின் சண்டைக் காட்சிகளை உருவாக்கிய ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜவானிலும் சண்டைக்காட்சிகளை உருவாக்கி உள்ளனர்.
ஸ்பைரோ ரசாடோஸ், யானிக் பென், கிரேக் மேக்ரே, கெச்சா கம்பாக்டி, சுனில் ரோட்ரிக்ஸ் மற்றும் அனல் அரசு ஆகியோர் அதிரடி சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளனர். பரபரப்பான பைக் காட்சிகள், இதயத்தை துடிக்கவைக்கும் டிரக், கார் சேஸ்கள் உள்ளன.