< Back
சினிமா செய்திகள்
பொன்னியின் செல்வன்-2 படத்தில் இருந்து சிவோஹம் பாடல் வெளியீடு
சினிமா செய்திகள்

'பொன்னியின் செல்வன்-2' படத்தில் இருந்து 'சிவோஹம்' பாடல் வெளியீடு

தினத்தந்தி
|
12 April 2023 8:49 PM IST

‘பொன்னியின் செல்வன்-2’ படத்தில் இருந்து ‘சிவோஹம்’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

கல்கி எழுதிய நாவலைத் தழுவி மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தியது.

இதனைத் தொடர்ந்து 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் 2-ம் பாகம் வரும் ஏப்ரல் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தை, லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. மேலும் இந்த படத்தில் இருந்து 'அக நக', 'வீர ராஜ வீர' ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து இன்று 'சிவோஹம்' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆதி சங்கரர் எழுதிய வரிகளைக் கொண்டு இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Chant away into this world of mystery and enchantment!#Shivoham lyrical video out now!

▶️https://t.co/lnb0dfcsTv#PS2 in cinemas worldwide from 28th April in Tamil, Hindi, Telugu, Malayalam, and Kannada!#CholasAreBack #PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @madrastalkies_pic.twitter.com/JYvN2ditaG

— Lyca Productions (@LycaProductions) April 12, 2023 ">Also Read:


மேலும் செய்திகள்