< Back
சினிமா செய்திகள்
பொன்னியின் செல்வன் 2 படத்தின் சிவோஹம் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும்...!
சினிமா செய்திகள்

'பொன்னியின் செல்வன் 2' படத்தின் 'சிவோஹம்' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும்...!

தினத்தந்தி
|
12 April 2023 4:35 PM IST

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ‘சிவோஹம்’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை ,

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், படத்தில் இடம் பெற்றுள்ள 'வீரா ராஜ வீர' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், படத்தில் இடம் பெற்றுள்ள மேலும் ஒரு பாடலான 'சிவோஹம்' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



மேலும் செய்திகள்