< Back
சினிமா செய்திகள்
வரும் 9-ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம்
சினிமா செய்திகள்

வரும் 9-ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயனின் 'அயலான்' திரைப்படம்

தினத்தந்தி
|
6 Feb 2024 5:57 PM IST

ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் 'அயலான்'.

சென்னை,

ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர். ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படம் கடந்த மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'அயலான்' தான். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படம் வரும் 9-ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்