< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் 'குரங்கு பெடல்' டிரெய்லர் வெளியானது

தினத்தந்தி
|
29 April 2024 7:31 PM IST

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

சென்னை,

சிவகார்த்திகேயனின் நடிப்பில் அவரது 21வது படம் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. 'அமரன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இப்படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். அவரது தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றி பெற்றன. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது 'குரங்கு பெடல்' என்ற படத்தை தயாரித்துள்ளார். கமல் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 'குரங்கு பெடல்' திரைப்படம் மே 3-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் 'குரங்கு பெடல்' திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. இந்த டிரெய்லரில் சிறுவன் ஒருவன் சைக்கிள் ஓட்டுவதற்கு ஆசைப்படுகிறான். அதற்காக அவன் செய்யும் செயல்கள், சவால்கள் ஆகியவற்றை மையமாக வைத்து கிராமப் பின்புலத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இப்படத்தில் காளி வெங்கட் அந்த சிறுவனின் அப்பாவாக நடிக்கிறார். யூடியூப் பிரபலங்களாக அறியப்பட்டு வெள்ளித்திரையில் நடித்து வரும் பிரசன்னா பாலச்சந்திரன் , ஜென்சன் திவாகர் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். டிரெய்லர் டைட்டில் கார்டில் இடம்பெற்றுள்ள "விளையாட்டு வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு நல்லது" என்கிற வசனம் கவனத்தை ஈர்க்கிறது.

மேலும் செய்திகள்