சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'பிரின்ஸ்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியீடு - படக்குழு
|அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'பிரின்ஸ்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
சிவகார்த்திகேயன் நடித்து வெளியான 'டாக்டர்' மற்றும் 'டான்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 'பிரின்ஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த படமானது வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.
#PrinceForDiwali here's the official announcement video!https://t.co/Bc849MvWP1#Sathyaraj sir @anudeepfilm #MariaRyaboshapka @MusicThaman @manojdft @Premgiamaren @Cinemainmygenes @SVCLLP @SureshProdns @ShanthiTalkies @Gopuram_Cinemas
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 21, 2022