< Back
சினிமா செய்திகள்
மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனை நினைவுகூர்ந்த  சிவகார்த்திகேயன்
சினிமா செய்திகள்

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனை நினைவுகூர்ந்த சிவகார்த்திகேயன்

தினத்தந்தி
|
25 April 2024 8:18 PM IST

மேஜர் முகுந்த் வரதராஜன் கதாப்பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்

சென்னை,

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே.21 படத்திற்கு அமரன் என பெயரிடப்பட்டுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜன் கதாப்பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இன்று மேஜர் முகுந்த் வரதராஜனின் 10ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமரன் படக்குழு 'சல்யூட்டிங் மேஜர் முகுந்த்' என்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர். சிவகார்த்திகேயன் அவரது நினைவு இடத்திற்கு சென்று சல்யூட் அடித்த படி ஒரு புகைப்படத்தை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்