'அமரன்' படத்தின் ரிலீஸ் குறித்து போஸ்டர் வெளியிட்டு அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்
|நடிகர் சிவகார்த்திகேயனின் 'அமரன்' படத்திற்கான வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது.
சென்னை,
நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதில் கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்த இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன.
இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இந்த டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதனைத்தொடர்ந்து, வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி 'அமரன்' படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 27-ந் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்ததாக கூறப்பட்டது.
தற்போது, இந்தப்படத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதி குறித்த அப்டேட்டை சிவகார்த்திகேயன் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு 'அமரன்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.