< Back
சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு

தினத்தந்தி
|
11 April 2024 5:56 PM IST

.சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார்.சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன. இந்நிலையில் அவருடைய தயாரிப்பில் வெளியாகும் புதிய படம் தொடர்பான அறிவிப்பை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

அதன்படி சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு 'குரங்கு பெடல்' என பெயரிடப்பட்டுள்ளது. கமல் கண்ணன் இயக்கத்தில் , ஜிப்ரான் இசையில் இந்த படம் உருவாக உள்ளது.

மேலும் செய்திகள்