< Back
சினிமா செய்திகள்
ஜோ படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய சிவகார்த்திகேயன்...!
சினிமா செய்திகள்

'ஜோ' படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய சிவகார்த்திகேயன்...!

தினத்தந்தி
|
26 Nov 2023 7:56 PM IST

நடிகர் ரியோ ராஜ் நடித்துள்ள 'ஜோ' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை,

அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜோ'. இந்த படத்தில் மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிகா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் சார்லி, அன்பு தாசன், ஏகன், கெவின் ஃபெல்சன், ப்ரவீனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான 'ஜோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பார்த்த பலரும் ரியோ ராஜ் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் படம் சிறப்பாக உள்ளதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 'ஜோ' படக்குழுவை நேரில் அழைத்து நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டி உள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ரியோ ராஜ், 'நீங்கள் தொடக்கத்தில் நம்பிக்கையை கொடுத்தீர்கள். எங்கள் முயற்சியின் போது ஊக்குவித்தது, தற்போது வெற்றிக்கு பிறகு இந்த பாராட்டு. எப்போதும் எங்களுடன் இருப்பதற்கு நன்றி அண்ணா' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்