< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயன் படத்தின் புதிய அப்டேட்
|12 March 2024 10:04 PM IST
சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் எஸ்.கே. 23 படத்தில் நடித்து வருகிறார்.
சென்னை,
சிவகார்த்திகேயன் 'அயலான்' படத்தின் வெற்றியை அடுத்து . அமரன் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகிய அமரன் படத்தின் டிரைலர் ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கி இருக்கிறார். அமரன் படத்திற்கு அடுத்து சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் எஸ்.கே. 23 படத்தில் நடித்து வருகிறார்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் நிறைவடைந்த நிலையில்.இன்று புதுச்சேரியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமானது. எஸ்.கே. 23 படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.