< Back
சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்
'மகாராஜா' பட இயக்குனரை சந்தித்த சிவகார்த்திகேயன்

25 Jun 2024 9:10 PM IST
நடிகர் சிவகார்த்திகேயன் எஸ்கே23 படத்தில் நடித்து வருகிறார்.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த 14-ம் தேதி வெளியானது. விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான இது, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ், தெலுங்கில் தயாரான இப்படத்தின் திரைக்கதை உருவாக்கமும், நடிகர்களின் நடிப்பும் பேசப்பட்டு வருகின்றன. இப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆனநிலையில், ரூ.75 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் மகாராஜா பட இயக்குனரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்தான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் எஸ்கே 23 படத்தில் நடித்து வருகிறார்.