< Back
சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயன் வெளியிட்ட ராபர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் வெளியிட்ட 'ராபர்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

தினத்தந்தி
|
27 April 2024 3:17 PM IST

‘மெட்ரோ’ சத்யா நாயகனாக நடிக்கும் ‘ராபர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'ராபர்'. இப்படத்திற்கு 'மெட்ரோ 'திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் திரைக்கதை எழுதியுள்ளார்.

சென்னையில் நாயகன் தேர்ந்தெடுத்த பாதை அவன் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதே 'ராபர்'படத்தின் கதை. இப்படத்தின் கதை, திரைக்கதையை 'மெட்ரோ' , 'கோடியில் ஒருவன்' படங்களின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் எழுதியுள்ளார்.

'மே மாதத்தின் இறுதியில் ராபரை வெளியிடும் திட்டத்தில் இருக்கிறோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன' என தயாரிப்பாளர் எஸ். கவிதா கூறினார்.

'ராபர்' படத்துக்கான படப்பிடிப்பு சென்னைக்குள் இருக்கும் தியாகராய நகர், வேளச்சேரி போன்ற இடங்களிலும் சென்னையைச் சுற்றியுள்ள செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.

தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார்.

மேலும் செய்திகள்