< Back
சினிமா செய்திகள்
ரஜினியுடன் இணையும் சிவகார்த்திகேயன்... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தலைவர் 171...!
சினிமா செய்திகள்

ரஜினியுடன் இணையும் சிவகார்த்திகேயன்... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தலைவர் 171...!

தினத்தந்தி
|
28 Nov 2023 12:20 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த், கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வசூலில் ரூ.600 கோடியை தாண்டிய நிலையில் ஜெயிலர் படம் ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி பொங்கலுக்கு வெளியாகவுள்ள "லால் சலாம்" படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் உடன் 170வது படத்தில் இணைந்துள்ளார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா ரகுபதி, பஹத் பாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படம் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனிடையே தலைவர் 170 என இப்படத்திற்கு தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

ரஜினியின் 171-வது திரைப்படத்தை கைதி, மாஸ்டர்,விக்ரம்,லியோ உள்ளிட்ட மிகப்பெரிய ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அந்த படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத்தான் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்காலிகமாக 'தலைவர் 171' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் ஏற்கனவே ஜெயிலர் படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது. தற்போது 'தலைவர் 171' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவரிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்