அதிரடி கதையில் சிவகார்த்திகேயன்
|சிவகார்த்திகேயன் 'மாவீரன்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் நாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மிஷ்கின் வில்லனாக வருகிறார். சரிதா, தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை மடோன் அஸ்வின் டைரக்டு செய்துள்ளார். இவர் மண்டேலா படத்தை இயக்கி பிரபலமானவர்.
`மாவீரன்' படத்தில் சிவகார்த்திகேயனின் தோற்றம், சீன் ஆ சீன் ஆ பாடல் ஆகியவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. இது அதிரடி சண்டை காட்சிகளுடன் குடும்ப படமாக உருவாகி உள்ளது. படம் ஆகஸ்டு மாதம் திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரித்துள்ளார். இசை: பரத் சங்கர், ஒளிப்பதிவு: வித்து அய்யன்னா. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியாகிறது.
"மாவீரன் படம் இதுவரை நான் செய்யாத புதிய கதைக்களம். இந்த கதைக்களத்திற்கு ஏற்ப ஷூட்டிங் செய்ய மிகவும் கடினமாக உழைக்க வேண்டி இருந்தது'' என்றார் சிவகார்த்திகேயன்.