< Back
சினிமா செய்திகள்
முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்
சினிமா செய்திகள்

முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

தினத்தந்தி
|
26 Sept 2023 12:32 PM IST

சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஏ.ஆர்.முருகதாசுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருவரும் இணையும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

தமிழில் தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, சர்கார், தர்பார் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் கடந்த சில வருடங்களாக படங்கள் டைரக்டு செய்யாமல் இருந்தார்.

இந்த நிலையில் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஏ.ஆர்.முருகதாசுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருவரும் இணையும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்து உள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் படம் அதிக பொருட் செலவில் புதுமையான கதை களத்தில் அதிரடி, கமர்ஷியல் படமாக தயாராக இருக்கிறது என்றும் இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் நடிக்கிறார்.

மேலும் செய்திகள்