< Back
சினிமா செய்திகள்
காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் ரிலீசாகும் சீதா ராமம்
சினிமா செய்திகள்

காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் ரிலீசாகும் 'சீதா ராமம்'

தினத்தந்தி
|
11 Feb 2024 10:27 PM IST

‘சீதா ராமம்’ திரைப்படம் வரும் 14-ந்தேதி திரையரங்குகளில் மீண்டும் ரிலீசாக உள்ளது.

சென்னை,

துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான 'சீதா ராமம்' திரைப்படம் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. 1964-ம் ஆண்டு கால கட்ட பிண்ணனியில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

காஷ்மீர் எல்லையில் பணியாற்றும் ராணுவ அதிகாரி முகவரி இல்லாமல் தனக்கு வரும் காதல் கடிதங்களை படித்து, அதை அனுப்பிய பெண்ணை கண்டுபிடிக்கிறார். அந்த பெண்ணுடன் அவரால் சேர்ந்து வாழ முடிந்ததா என்பதை உருக்கமாக படமாக்கி இருந்தனர்.

காதல் கடிதங்களை அனுப்பும் பெண்ணாக மிருணாள் தாக்கூர் நடித்து இருந்தார். இதில் ராஷ்மிகா மந்தனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் 'சீதா ராமம்' திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வரும் 14-ந்தேதி திரையரங்குகளில் மீண்டும் ரிலீசாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.



மேலும் செய்திகள்