< Back
சினிமா செய்திகள்
சிங்கிள் மால்ட் கும்பல் - பாடலின் புரோமோ வீடியோவை வெளியிட்ட பிரபுதேவா படக்குழு
சினிமா செய்திகள்

'சிங்கிள் மால்ட் கும்பல்' - பாடலின் புரோமோ வீடியோவை வெளியிட்ட பிரபுதேவா படக்குழு

தினத்தந்தி
|
13 Aug 2023 10:46 PM IST

பிரபுதேவா நடித்துள்ள 'வுல்ஃப்' படத்தின் 'சிங்கிள் மால்ட் கும்பல்' என்ற பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

எஸ்.ஜே.சூர்யாவின் உதவி இயக்குனராக பணியாற்றி 'சிண்ட்ரெல்லா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வினு வெங்கடேஷ். இவர் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா தற்போது தனது 60-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்துக்கு 'வுல்ஃப்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அனுசுயா பரத்வாஜ், ராய் லட்சுமி, வசிஷ்டா சிம்ஹா, ரமேஷ் திலக், அஞ்சுகுரியன், ஸ்ரீகோபிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 4 மொழிகளில் தயாராகி உள்ளது. சந்தேஷ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வசியம் செய்வதை மைய கருவாக வைத்து வரலாற்று காலத்தில் இருந்து இன்றுவரை பயணிக்கும் திகில் கதையம்சத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் 'சிங்கிள் மால்ட் கும்பல்' என்ற பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரபுதேவா எழுதி நடிகர் விஜய் சேதுபதி பாடியுள்ள இந்த பாடல் வருகிற 16-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்