< Back
சினிமா செய்திகள்
நாளை மறுநாள் வீடு திரும்புகிறார் பாடகி பி.சுசீலா
சினிமா செய்திகள்

நாளை மறுநாள் வீடு திரும்புகிறார் பாடகி பி.சுசீலா

தினத்தந்தி
|
18 Aug 2024 11:58 AM IST

பாடகி பி.சுசீலா 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

சென்னை,

பாடகி பி.சுசீலா, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஒரியா, சமஸ்கிருதம் உள்பட பல்வேறு மொழி படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.

1950 முதல் சினிமாவில் பின்னணி பாடகியாக இருக்கும் பி.சுசீலா 17,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இந்திய மொழிகளில் அதிக பாடல்களை பாடியவராக அறியப்படுகிறார்.

இந்நிலையில், 88 வயதான பி.சுசீலா சிறுநீரகக் கோளாறு மற்றும் வயது முதிர்வு காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இதையடுதது மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

எனவே, சுசீலாவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாடகி பி.சுசீலா சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து நாளை மறுநாள் வீடு திரும்புகிறார் எனக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்