< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
குத்துப் பாடலுக்கு சிம்ரன் விளக்கம்
|21 April 2023 10:10 AM IST
சினிமாவில் கதாநாயகர்களுக்கு இணையாக நடனத்தில் பட்டையை கிளப்பக்கூடியவர், சிம்ரன். இவர் உச்சத்தில் இருந்தபோதே 'யூத்' படத்தில் விஜய்யுடன் ஒரே ஒரு குத்துப் பாடலுக்கு நடனம் ஆடினார். இது குறித்து சமீபத்தில் ரசிகர்களிடம் அவர் மனம் திறந்து பேசும்போது "நல்ல படங்களில் நடனமாட நான் தயங்குவதில்லை. இது என் வாழ்க்கை, நான்தான் முடிவு செய்ய வேண்டும். அந்தப் பாடலுக்கு ஆட வேண்டாம் என்று நிறைய பேர் சொன்னார்கள். அதையும் மீறித்தான் ஆடினேன். பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஒருவேளை அவர்களது பேச்சை எல்லாம் நான் கேட்டிருந்தால் ஒரு சூப்பர் ஹிட் வாய்ப்பை இழந்து இருப்பேன்" என்றார்.