அஜித்தின் 'குட் பேட் அக்லி ' படத்தில் இணையும் சிம்ரன், மீனா?
|நடிகைகள் சிம்ரன், மீனா இருவரும் அஜித் படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைந்துள்ளார். விடாமுயற்சி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. விடாமுயற்சி படத்திற்குப் பின் நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படத்திற்கு, 'குட் பேட் அக்லி' எனப் பெயரிட்டுள்ளனர்.
இதில், நடிகர் அஜித்துக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மே முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.. இந்த நிலையில், 'குட் பேட் அக்லி ' படத்தில் நடிகைகள் சிம்ரம், மீனா இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அஜித்துடன் சிம்ரன் நடித்த வாலி மிகப்பெரிய வெற்றிப்படமானது குறிப்பிடத்தக்கது.