< Back
சினிமா செய்திகள்
சிம்பு படத்தின் புதிய அப்டேட்...
சினிமா செய்திகள்

சிம்பு படத்தின் புதிய அப்டேட்...

தினத்தந்தி
|
31 Jan 2024 6:55 PM IST

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு புதிய படத்தில் நடிக்கிறார்.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு, பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இ்ப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், 'எஸ்.டி.ஆர். 48' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தங்களது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்